பிரதமரின் திட்டத்திற்கு செயல்வடிவம்! பிரதேச செயலாளரை இடம்மாற்ற மஸ்தான் m.p முயற்சி

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று திடீரென ஒன்று கூடிய மூவின மக்கள். இதற்கான காரணத்தை அவதானிக்கும் முகமாக எமது பிரதேச செய்தியாளர் சென்று மக்களுடன் மக்களாக நிலமையை பார்வையிட்டதற்கு அமைவாக இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களால் மாடு வெட்டுவதற்கு தடைவிதிக்குமாறு அமைச்சரவையில் சமர்ப்பிக்க பட்ட வேண்டுதலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததற்கு அமைவாக 608 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மூவின மக்களும் வசித்து வருகின்ற நிலையில் மாடு வெட்டுவதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் அவர்கள் வழங்காமைக்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் அவர்கள் இடமாற்றம் வழங்க முயற்சிப்பதாகவும் அந்த பிரதேசத்தில் குடியிருக்காத புத்தளம் பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க பிரதேச செயலாளர் எதிர்ப்பாக இருப்பதாலும் பிரதேச செயலாளரை இடமாற்றம் வழங்க எத்தனிப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவர்கள் மேலும் தெரிவிக்கையில் பிரதமரின் கருத்திட்டத்திற்கு செயல் வடிவம் குடுப்பது தவறா? எமது நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து எம்மை மீள்குடியேற்றம் செய்து எந்த அரசியல் வாதியும் திரும்பி பார்க்காத சந்தர்ப்பத்தில் அவரின் புதல்வரை வன்னிக்கு அடிக்கடி அனுப்பி எம்மை எமது நிலமையை அவதானித்த எமது நாட்டின் ஒரே ஒரு தலைவர் அவர் அவரால் கொண்டு வந்த தீர்மானத்திற்கு செயல் வடிவம் குடுத்தமைக்கு இடமாற்றமா? என் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.