2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்!! இது தான்….

2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதில் பயனர்கள் வழங்கிய மதிப்பீடுகளின் அடிப்படையில் 2021 ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் மாடலாக ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் தேர்வாகி இருக்கிறது.

இது 5ஜி வசதி கொண்டிருப்பதாலும் நீண்ட நேர பேட்டரி பேக்கப், பெரிய டிஸ்ப்ளே, சிறப்பான கேமரா உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இந்த ஆண்டுக்கான சிறந்த ஐபோன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

Apple iPhone 12 Details and Release Date 2020 | POPSUGAR Tech

அடுத்ததாக 2021 ஆண்டுக்கான சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி தேர்வாகி இருக்கிறது.

இது பெரிய டிஸ்ப்ளே மட்டுமின்றி, எஸ் பென் வசதி, குறைந்த விலை உள்ளிட்ட அம்சங்களால் இது சிறந்த ஆண்ட்ராய்டு போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.

மேலும் சிறந்த பட்ஜெட் போன் என்ற பிரிவில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு என்10 சிறப்பான 5ஜி 5ஜி வசதி வழங்கியதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.