வடமாகாணத்தில் காணி அதிகாரம் வழங்குவதற்கு முன்னரே தமிழ்கொடியின் திட்டமிடலிலில் தமிழரசுக்கட்சியின் ஆதரவுடன் புலம்பெயர் தமிழர்களின் காணிகள் சுபீகரிக்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டு இது யூரியூப் வியாபாரமாக்கப்பட்டு வருகிறது ஒர் இரு தினங்களுக்கு முன் ஜெர்மன்பிரஜை ஒருவரால் ஓர் தற்காலிக குடிசை அடித்து நொருக்கப்பட்டதாக ரியூப்தமிழ் இணையம் வெளியிட்ட செய்தி ஏற்கனவே காணி அபகரிப்புக்காக அவர்களால் திட்டமிடப்பட்ட செய்தி என்பது ஆதாரங்கள் ஊடாக புலப்படுகிறது .குறித்த வெளிநாட்டு பிரஜைக்கு சொந்தமான காணியை அபகரிக்கும் திட்டத்துடன் அந்த காணியில் குடியமர்ந்து இருந்த குடும்பத்தினரை பல ஆண்டுகளாக தமது காணியை ஒப்படைக்குமாறு குறித்த வெளிநாட்டு பிரஜை கூறியும் பிரதேச செயலாளர் ஊடாக காணி பிணக்கு விசாரணைகள் நடத்தி பிரதேச செயலாளர் ஊடாக காணியை விட்டு வெளியேற கடிதங்கள் மற்றும் கட்டளைகள் பிறப்பித்தும் வெளியாறாமல்
குறித்த வெளிநாட்டு பிரஜையை சினம் ஊட்டும் முகமாக தமிழ் கொடி தமது அடியாட்களுடன் கட்டப்பஞ்சயத்து செய்து காணி அபகரிக்க முயற்சித்த வேளை ஆத்திரமுற்ற வெளிநாட்டு பிரஜை குறித்த தற்காலிக வீட்டை உடைத்த சம்பவத்தை தமக்கு சாதகமாக்கி அடிதடி வழக்காக பதிவு செய்துள்ளனர். அதைவிட செய்திகளை பார்ப்பவர்களை ஆத்திரமூட்டும் முகமாக திரிவுபடுத்தி வெளியிட்டு புலம்பெயர் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது எம்மால் வெளியிடப்படும் ஆதாரம் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காகவே! சம்மந்தப்பட்ட அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு புலம்பெயர் உறவுகளும் எங்கள் உறவுகளே சமூக சேவைக்காக உங்களால் வழங்கப்படும் பணம் உங்களுக்கே எதிராக சட்டத்தினை விலைபேச பயன்படுத்தப்படுகிறதா ஆராயுங்கள்!!!