லண்டனில் பட்டப்பகலில் பூங்கா ஒன்றில் வைத்து பாடசாலை மாணவி ஒருவரை, சிறுவர்கள் மூவர் திட்டமிட்டு சீ.ர.ழி.த்.த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனின் டெப்ட்போர்டில் உள்ள பெப்பிஸ் பூங்காவிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மார்ச் 22ம் திகதி சுமார் 4.30 மணியளவில் பேருந்தில் இருந்து இறங்கிய 15 வயதேயான பாடசாலை மாணவி, பெப்பிஸ் பூங்காவிற்கு சென்றதுடன், ஒரு இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது 16 அல்லது 17 வயது மதிக்கத்தக்க ஒருவன் மாணவியை அணுகியுள்ளான். அதேவேளை சம வயதுடைய இன்னும் இருவரும் இணைந்து கொண்டதுடன்,
சட்டென்று மாணவியின் மொபைல் போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதி அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, மொபைல் போனுக்காக அந்த மூவர் கும்பலை துரத்தியுள்ளார்.
ஆனால் அந்த கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, பூங்காவின் இன்னொரு பகுதியில் வைத்து கூட்டாக சீ.ர.ழி.த்.து.விட்டு மாயமாகியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவி பொலிசாரை நாடி புகார் அளித்துள்ளார்.
மாணவியை பட்டப்பகலில் சீ..ர.ழி.த்.த மூவரும் ஆசிய நாட்டவர்கள் அல்லது கருப்பினத்தவர்கள் என புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை கைது நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை எனவும்,
புகாரில் குறிப்பிட்டுள்ள அடையாளங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பவம் நடந்த நாளில், குறித்த பூங்காவில் சென்றிருந்த பொதுமக்கள், இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிய வந்தால் பொலிசாருக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.