கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி கண்டாவளை சுகாதார அதிகாரியின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை தனக்கு தெரிந்த ஒரு அடியாளின் உதவியுடன் தொலைபேசியில் மிரட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது குறித்த பிராந்திய சுகாதார அதிகாரியின் அடியாள் தன்னை ஜனாதிபதியின் அருகில் இருப்பது போல் சித்தரித்து கட்டை பஞ்சாயத்து கப்பம். போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார் என் அறிய முடிகிறது.
இவர் குறித்து எமது கிளிநொச்சி செய்தியாளர் சில ஆதார பூர்வமான தகவல்களை திரட்டியுள்ளார் அதை ஆதாரமாக வைத்து பார்க்கும் போது இவர் 2018 பிரதேச சபை தேர்தலில் வட்டுக்கோட்டை தொகுதியில் வலிமேற்கு பிரதேச சபை தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்டதாகவும் இவர் பெயர் பா.கோபாலகிறிஸ்ணன் எனவும் இப்போது தான் தற்போதைய ஜனாதிபதியின் கீழ் பணிபுரிபவர் போல் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அறிய முடிகிறது எது எவ்வாறு இருப்பினும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளர் அவர்கள் தனது ஆளுகைக்கு கீழ் உள்ள கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி குறித்து முறையிட யார் இவர்?இவருக்கும் சுகாதார அமைச்சு க்கும் இருக்கும் தொடர்பு என்ன? இல்லை வட மாகாணத்தில் கௌரவ ஜனாதிபதியின் பெயரை கலங்கப்படுத்த ஐக்கிய சுதந்திர கட்சியின் சதி திட்டமா!
இதில் இணைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவில் தான் கௌரவ முன்னாள் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களின் செயலாளர் அவர்களுடன் கதைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பொதுஜன பெரமுன கவனம் செலுத்துமா? அரச அதிகாரிகள் மற்றும் இலங்கை நீதி துறை ஆகியவற்றில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என ஜனாதிபதி கூறுகிற போது இது எவ்வாறு? ஓர் அரச உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஜனாதிபதியின் பெயரை வடக்கு மாகாணத்தில் மக்கள் மத்தியில் தவறாக சித்தரித்தமை இவற்றுக்கு சட்டம் தன் கடமையை செய்யுமா? பிராந்திய சுகாதார பணிப்பாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?