போதைப் பொருள் கடத்தலுக்கு நகரசபை உடந்தையா? இருளில் மூழ்கிய கிராமம்!

வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட கோவில்குளம் கிராம சேவையாளர் பிரிவில் ஓர் இரு மாதங்களாக பிரதான வீதியில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.(video இணைப்பு)

இது குறித்து எமது செய்தியாளர் மேற்குறிப்பிட்ட கிராமத்துக்கு சென்று நிலைமையை நேரில்பார்த்து கிராம மக்களிடம் இந்த கிராமத்தில் நகரசபை உறுப்பினர்கள் இல்லையா? என கேட்டதற்கு கிராமவாசிகள் ஒருவர் அல்ல இருவர் இருப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தினீர்களா எனக் கேட்டதற்கு இல்லை அவர்களும் இந்த வீதியால் தான் சென்று வருகிறார்கள் ஆதலால் அவர்களுக்கு தெரியாத ஒரு விடயம் அல்ல இது என தெரிவித்தனர் பல மாதங்களாக இதை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது போதைப்பொருள் பரிமாற்றத்திற்காக கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளதா?

என எண்ணத்தோன்றுவதாகவும் இரவு வேளைகளில் பல வாகனங்கள் வந்து தரித்து நின்று செல்வதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர்.இது இவ்வாறு இருக்க நகரத்தை அண்டிய இந்த கிராமத்தில் நிரந்தர கிராம சேவையாளரே நிரந்தர சமுர்த்தி உத்தியோகத்தரே இல்லை என்பதும் கிராமத்திலுள்ள பாலர் பாடசாலையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்கின்ற நிலையில் பொருத்தமான இட வசதிகள் எதுவும் காணப்படவில்லை.

இக்கிராமத்திதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது எதற்காக? இந்த வழியால் வடமத்திய மாகாணத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றனவா? என்ற சந்தேகம் எழுவதாகவும் ஒரு சில மாதங்களுக்கு முன் கிராம இளைஞர்களால் சிறுபான்மை சகோதர சமூக நபர் ஒருவர் இரவு வேளைகளில் பிடிக்கப்பட்டார் ஏனையோர் kdh ரக வாகனத்தில் தப்பித்து விட்டதாக அறியமுடிகிறது நகரசபை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை தொடர்ந்தும் நகரசபை மௌனம் சாதிக்குமா? இது நகர சபையின் கவனத்திற்கு!