போலியான செய்தியை வெளியிட்ட கிறைம் நியூஸ் இணையதளம்!

இன்றையதினம் வவுனியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் கிறைம் நியூஸ் எனும் இணையத்தளத்தில் போலியான ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது கோவில்குளம் பகுதியில் விடுதிகள் எதுவும் இல்லாத போதும் கோவில்குளம் பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர் covid உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையம் செல்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்ட விடுதியில் சில வைத்திய அதிகாரிகள் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாகவும் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி என் கிராம மக்கள் தெரிவித்தனர் இந்த இணையதளம் தனிப்பட்ட அரசியல் ரீதியாக தமது கிராமத்தில் வைத்துள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே விடுதி இல்லாத கிராமத்தில் விடுதி இருப்பதாக சித்தரித்து போலி செய்தி ஒன்றை பிரசுரித்துள்ளதாகவும் இந்த செய்தி குறித்து பொலிஸில் முறையிட உள்ளதாகவும் கிராம வாசிகள் தெரிவித்தனர்.