மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு காவல்துறையினர் தெரிவிப்பு….!!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர்சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று மாலை (09) மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு ! | Virakesari.lk

நேற்று வியாழக்கிழமை தனிமையில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை மோட்டர்சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள் அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் காத்தான்குடி பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 20,19 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் அறுக்கப்பட்ட 2 பவுண் தங்கச் சங்கிலி ஒன்றையும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டர் சைக்கிளினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.