புத்தளம் பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை நேற்று செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய கணவனால் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியுள்ளது. மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.
உயிரிழந்த மனைவியின் சடலத்தை சாக்குப் பை ஒன்றில் வைத்து கட்டிலுக்கு கீழ் மறைத்து வைத்துள்ளார்.
இன்று அதிகாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கட்டிலுக்கு கீழ் இருந்த சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.