மனைவியை டீசல் ஊற்றி எரித்த கணவன்.. மல்லாவியில் சம்பவம்!!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி நகரின் 2ம் பகுதி அன்னிச்சியன்குளம் 5ம் ஒழுங்கையில் வசிக்கும் துஸ்யந்தினி என்ற இளம் குடும்பப் பெண்ணை அவரது கணவரான கனகராசா சயந்தன் என்பவர் டீசல் ஊற்றி எரித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் 01.10.2021 அன்று இடம்பெற்றுள்ளது.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இடம்பெற்ற வாய்தர்க்கம் முற்றியதன் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. ஏரிகாயங்களுக்குள்ளான பெண் தற்போது யாழ்ப்பாணம் வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.