கடந்த சில நாட்களாக வவுனியாவில் பேசும் பொருளாக சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் பிரதீபன் அவர்கள் காணப்படுவதாகவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு உதவி புரிந்து வருவதாகவும் அந்த கிராம மக்கள் பலர் வைத்தியர் பிரதீபன் அவர்களை புகழ்பாட ஆரம்பித்ததை அடுத்து இன்றையதினம் அவரால் மேற்கொள்ளப்பட்ட நடமாடும் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வின் பக்கம் எமது ஊடகத்தின் பார்வை திரும்பியது
ஆசிகுளம் மற்றும் சமளங்குளம் கிராம அலுவலர் பிரிவுகளில் நடைபெற்ற இந்த நடமாடும் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் இலங்கை இராணுவத்தினர் மற்றும் கிராம அலுவலர்கள் மற்றும் தாதியர்கள் மற்றும் வைத்தியர்களின் இடர்கால சேவையை பாராட்டியே ஆக வேண்டும் என கிராம சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து குறித்த சமூக சேவகரும் வைத்தியரும் ஆன பிரதீபன் அவர்களிடம் கருத்து கேட்ட போது தான் கடமையாற்றும் கிராமம் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட எல்லைக்கிராமம் எனவும் அவர்களின் வாழ்வாதார சுகாதார நடைமுறைகளை கவனித்து உதவி புரிய வேண்டியது தனது கடமை என்றும் தன்னைவிட கிராம தலைவர்கள் கிராமஅலுவலர்கள் என பலரும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர்களின் ஒத்துழைப்பால்த்தான் மக்களுடன் மக்களாக நின்று சேவையாற்ற முடிகிறது என்றும் கூறினார்.
பிரத்தியேகமாக சில கிராம அலுவலர்கள் யாரும் சென்று பார்க்க கூட முடியாத மக்களின் இல்லங்களை இனங்கண்டு தம்மை அழைத்துச் சென்று தடுப்பூசி ஏற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் இவ்வாறான மக்கள் சேவையில் ஆர்வம் கொண்ட உத்தியோகத்தர்களை பாராட்டியே ஆக வேண்டும் என்றார்.”குறைகூறுவதை விட்டு உற்சாகம் அளித்து உதவி செய்துபார் புதிய சமுதாயம் உனக்கு முன் பயணிக்கும்”என்று புன்னகையுடன் சென்றார் என எமதசெய்தியாளர் குறிப்பிட்டார்