வவுனியாவின் முக்கிய அமரத்துவம் அடைந்த வர்த்தகர் ஒருவரின் மகனின் ஆவணங்கள் பொது வெளியில் பகிராமல் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் எங்களின் கைகளில் அகப்பட்டது. அறப்பணி பொது பணி என்று தன்னை அர்பணித்த வவுனியாவின் ஏழைகளுக்கு கிடைத்த ஓர் முத்து இவ்வுலகை விட்டு பிரியும் போது இவர் பணியை இனி யார் தொடர்வார் என பதைபதைத்து துவண்ட மக்களுக்கு மீண்டும் இவர் பிறந்து வந்தது போல! ஓர் உணர்வு சொந்த பணத்தில் சமுக பணியே தன் பணி என்றிருந்த அமரர் திரு மா. கதிர்காமராஜா (புஸ்) அண்ணா என்ற அற மா மலையான வவுனியாவின் பிரபல வர்த்தகர் புஸ் அவர்களின் மறைவுக்கு பின் அவரின் உணர்வு சுமந்து சமூக சேவையை இவரின் குடும்பத்தார் ஆற்றி வருவதும் இவரின் ஆசையை இவரின் ஆசீர்வாதத்துடன் இவரின் மகன் ஹம்பரீஷன்
ஆற்றிவருவது வவுனியாவின் பேசும் போருளாக மாறியுள்ளது புலம்பெயர் சமூகத்தில் சமூக சேவை என்ற போர்வையில் பணத்தை திரட்டி வவுனியாவில் சுகபோகம் அனுபவிக்கும் வெள்ளை தோல் வைத்த கறுப்பாடுகளுக்கு மத்தியில் பல லட்சம் ரூபா செலவில் சொந்த பணத்தில் புஸ் அண்ணா நாமத்தில் தோனிக்கல் சிவன் ஆலயத்தில் மண்டபம் அமைத்து மக்கள் பாவனைக்கு வழங்கியது இந்த தைபொங்கலாவது எமது வாழ்வில் சூபிட்சம் தராதா பொங்க ஓர் வழி கிடைக்காதா என ஏங்கியிருந்த பல ஆயிரம் உள்ளங்களுக்கு பொங்கல் பானைகள் வழங்கி கல்விக்கு பக்கபலமாக உபகரணங்கள் உணவுக்கு கஸ்ரப்படுபவர்கள் பசி போக்கும் உணவு போதிகள் இவ்வாறு பல பல சேவைகளின் சிகரம் எனலாம்
இந்த இளம் தளிரின் சேவை மக்களின் தேவை என்ற ரீதியில் குறித்த நபருடன் தொடர்பு கொண்ட போது செய்த செய்கின்ற செய்யப் போகின்ற உதவிகளை பகிரங்கப்படுத்துவது தனது நோக்கமல்ல தந்தையின் கனவுகளை இலட்சியத்தை நிறைவேற்றுவதே மகனகா தனது இலட்சியம் அதை மக்களுக்கு வழங்குவதற்கு எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து முன்ஏற தயார் என்றார்.வெளியில் பகிரங்கப்படுத்தாமல் சமூக சேவை செய்யும் இவர்களை நாம் வெளியில் இனங்காட்ட என்றும் தவற போவதில்லை இது எமது கடமை அல்லவா!!!!