விளையாட்டுதுறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் உடனடியாக வடக்கு கிழக்கில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு covid தடுப்பூசி இரண்டு மாதங்களுக்குள் வழங்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். கடந்த காலத்திலும் சரி இன்றும் சரி தமிழ் இளைஞர்களில் நாமல்ராஜபக்ச அவர்கள் காட்டும் கருசணையை பல இளைஞர்கள் தமது முகப்புத்தகத்திலும் சரி பொது இடங்களிலும் சரி வாழ்த்தி வருகின்றனர்
இது குறித்து தமிழ் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவித்த போது நாமல் வடக்கு கிழக்கு தமிழ் இளைஞர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாது இரண்டறக் கலந்த ஒருவர் என்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி தமிழ் அமைச்சர்களும் சரி இளைஞர்களின் தேவை அறிந்து செயல் பட தவறிவிட்டதாக சாடினார் யுத்தம் நிறைவு பெற்று மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின் வடக்கின் தமிழ் பிரதேசங்களில் அடிக்கடி சென்று மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்த ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவராக மட்டுமே இருக்க முடியும் என்றார்