மீண்டும் புத்துணர்ச்சிக்கு வழிவகுக்குமா இந்த சந்திப்பு..?

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றில் இருந்து 1999 ம் ஆண்டு வரை கல்வி கற்று வெளியேறிய பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து யுத்த முடிவின்பின் ஒற்றுமைக்கு இலக்கணமாக “99 Eagle” எனும் பெயரில் வவுனியாவில் முதன் முறையாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பழைய மாணவர்கள் ஒன்றுகூடலினை மிகச்சிறப்பாக 2010 ஆம் ஆண்டு முதல் நடாத்தினர்.

2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “99 Eagle” மூலம் தங்களை உருவாக்கிய ஆசிரிய பெருந்தகைகளுக்காண கௌரவிப்புக்கள், மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகள், வறிய மாணவர்களுக்கு பாடசாலை கல்வியை தொடர பொருளாதார உதவிகள் என வருடாந்த ஒன்றுகூடலின் மூலம் திட்டங்களை வகுத்து புதிய பரிணாம வளர்ச்சி பாதையில் பயணித்து வருகின்றது.

கடந்த வருடங்களில் ஒன்றுகூடல் நிகழ்வுகள் COVID நோய்த்தொற்று காரணமாக சில தடங்கல்களை எதிர்கொண்டபோதிலும் வருகின்ற 12.12.2021 இடம்பெறவுள்ள ஒன்றுகூடலில் புதிய திட்டங்களுடன் புத்தெழுச்சி பெற்று பயணிக்கும் என பலரும் எதிர்பார்கின்றனர்.

இந்த அணியினரின் பன்னிரண்டுகால பயணத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதுடன் நாடு கடந்து உலகெங்கும் பரந்து வாழ்ந்தாலும் இவர்களின் இந்த ஒற்றுமையான பயணம் வியக்கத்தக்கதாக இருப்பதாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்களால் நடத்தப்பட்ட மகாவித்தியன் டே இல் இவர்கள் தமக்கு தனி அடையாளமாக தனிகொடி தனி சீருடையுடன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதோடு பாடசாலைக்கு இவர்களால் பல இலட்சம் பெறுமதியான அறிவித்தல் சாதனங்கள் (Sound System) வழங்கிவைக்கப்பட்டமை குறிபிடத்தக்கது

இன்றை பொருளாதார சூழ்நிலையில் பாடசாலைகள் தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கை வரலாற்றில் வடமாகாண கல்வி பலத்த விழுக்காட்டை சந்தித்து இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஆசிரியர்கள் போராட்டங்கள் என மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாக இருக்கும் இந்த சந்திப்பத்தில் இந்த ஒன்றுகூடலின் மூலம் பாரிய அபிவிருத்தி மற்றும் ஆக்க பூர்வமான மாணவர்களின் கல்வி சார்ந்த விடயங்கள் தொடர்பில் முன்னெடுப்புக்கள் இடம்பெறுமா என பலரும் எதிர்பார்கின்றனர்.

இது குறித்து இந்த அணி சார்ந்த சிலரை நாம் தொடர்புகொண்ட வேளை அவர்கள் தமது ஒன்று கூடல் வருகின்ற வாரம் 12.12.2021 ம் திகதியன்று நடைபெற இருப்பதால் இந்த பிரிவுக்குரிய தம்மால் தெடர்பு கொள்ளமுடியாத மாணவர்கள் யாராக இருந்தாலும் நடைபெற இருக்கும் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு அன்பான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.