முகநூல் செய்தி மீளாய்வு!. இளைஞர் வைத்தியசாலை அவசர பிரிவில்! வைத்தியரின் மனைவி தலைமறைவு?

வவுனியா மன்னார் வீதியில் குருமன்காட்டு பகுதியில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் விபத்து ஒன்று இடம்பெற்றதாகவும் விபத்தை ஏற்படுத்திய நபர் தனது மோட்டார் சைக்கிளை வீதியில் விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் முகநூலில் பதிவு செய்யப்பட்ட செயதியை எமது வவுனியா செய்தியாளர் ஆராய்ந்து பார்த்த வேளை இந்த விபத்தை ஏற்படுத்தியவர் ஒரு வைத்தியரின் மனைவி என்றும் சம்பவ இடத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன என்றும் ஒரு இளைஞர் வவுனியா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும்.விபத்தை ஏற்படுத்திய வைத்தியரின் மனைவி இதுவரை கைது செய்யப்படவில்லை இவரின் மோட்டார் சைக்கிளை வைத்தியசாலையில் உள்ள இளைஞரின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது. குறித்த சந்தேக நபர் இதுவரை கைது செய்யப் படாதமைக்கான காரணங்களை அறிய முடியவில்லை.இது வரை வெளிப்படுத்தப்படாமல் முகநூலில் வந்த செய்தியை உறுதிப்படுத்தி வெளியிட்டுள்ளோம்.