முல்லைத்தீவில் உள்ள மாஃபியா? ஆதாரங்கள் அகப்பட்டுள்ளன! மக்கள் ஆதங்கம்.

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் ஒரு சில வாகனங்களும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இலங்கையின் பிரபலமான ஊடகங்களின் அன்றைய நாளிற்கான செய்திகளாக இருந்தமை யாவரும் அறிந்ததே! இந்த சம்பவம் குறித்து போலீசார் 3 இளைஞர்களை கைது செய்திருந்தனர். இது இவ்வாறிருக்க எமது slk இணையத்தளம் இது குறித்த ஆவணங்கள் சேகரிப்பும் இதுகுறித்து விசாரணைத் தேடுதல் ஒன்றை பிரத்தியோகமாக செய்திருந்தது இதன் அடிப்படையில் முல்லை மாவட்டத்தில் முல்லைத்தீவில் வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் பல கோடி பெறுமதியான வாகனங்கள் இருந்த அந்த நபர் யார்? அவர் என்ன வருவாய் ஈட்டுகிறார்? எதுவிதமான சட்டரீதியான வருமானமும் இல்லாத ஒரு சாதாரண நபரிடம் இவ்வளவு நிதி எங்கிருந்து வந்தது! இவ்வாறான கேள்விகளுக்கு இந்தியாவிலிருந்து திடுக்கிடும் பதில்கள் வந்தன. இந்தியாவின் குடியிருமை எனக் கருதப்படும் ஆதார் கார்ட் ‘உள்ள இந்தியாவில் நிதி மோசடி வழக்குகளில் தேடப்படும் சந்தோக நபர் தான் இவர் என்றும் இலங்கையில் பல கடவுச்சீட்டு களுடனும் ஆள்மாறாட்டம் செய்து வருகிறார் என்பது தெட்டதெளிவாக அம்பலமாகிறது இவரின் குடும்ப உறுப்பினர்களின் கணக்குகளுக்கு வருடாந்தம் பல கோடி ரூபாய் நிதி வருவதும் இவருக்கு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து தான் இந்த நிதி வருகின்றனவா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க இவர் இந்தியாவில் தேடப்படும் பலதிருட்டு நிதிமோசடி சம்பவத்துக்கு உரியவர் என்றும் எமது நாட்டின் சட்டத்திற்கு மாறாக இரட்டை பிரஜாவுரிமையை இல்லாமல் இந்தியாவின் ஆதார் கார்டுடன் உள்ளவரும் வருடத்தில் உறவினர்களின் வங்கி கணக்கில் டயஸ்போரா பணம் வருகை இவ்வாறு பல
குற்றங்களை புரிந்துள்ள இந்த சந்தோக நபரினால் பாதிக்கப்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் போது மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்கள் குற்றவாளிகள் எனில் இவர் யார்? ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இடையூறாக இருக்கும் இவரை பாதுகாப்புத் துறை கைது செய்யாதது ஏன்? இவருடைய பல வழக்குகள் இந்தியாவில் நிலுவையில் இருக்கும் போது இவர் கடல் மார்க்கமாக இலங்கை தப்பி வந்தார் என்ற ஆதாரம் இருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார் சட்டம் தன் கடமையை செய்யுமா? நாட்டின் பாதுகாப்பில் அக்கறை உள்ள அதிகாரிகளின் கவனத்துக்கு?