ரிசாட் பதியுதீக்கு 18 ம் திகதிவரை விளக்கமறியல்!!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுளளது

ரிஷார்ட் பதியுதீன் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்து இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தபட்டார்.

2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைப் படையினருக்கு உதவியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.