லண்டன் நபர் வவுனியாவில் அடாவடி!!! விலை போனதா அரச நிர்வாகம்!!!

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள போக்குவரத்து போலிஸ் வீதி கடமையறை அமைந்துள்ள இடத்தில் பல ஆண்டுகளாக அந்த சந்திக்கு ஒதுக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் தரிப்பிடம் உள்ளது யாவரும் அறிந்ததே!! இந்த இடத்தில் பகல் நேரத்தில் சற்று ஆரோக்கியமாக இளைப்பாற பல வருடங்களாக ஆட்டோ ஓட்டுனர்களால் வளர்து வந்த நினல் தந்த மரத்தினை லன்டனில் இருந்து வந்த நரசிம்மராவ் என பெயர் குறிப்பிடப்படும் அந்த இடத்தில் கடைக்குரிய கட்டடம் வைத்திருக்கும் உரிமையாளர் அடாவடியாக வெட்டி எறிந்த விடயம் அவ் இனலில் இளைப்பாறும் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்குரிய கட்டிடம் கூட சரியான அனுமதி இன்றி அடாவடியாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.வவுனியாவில் உள்ள பல நல்உள்ளங்கள் வவுனியா மண்ணில் அக்கறை கொண்ட சமூக பற்றாளர்கள் தினமும் ஙாற்று கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வரும் இந்த சந்தர்பத்தில் மரங்களை வெட்டாமல் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் கொண்ட எமது நாட்டில் நீதியை நிலைநாட்டக்கூடிய சிறந்த நீதிபதிகள் கடமையில் உள்ள வவுனியா மண்ணில் அணைவருக்கும் சவால் விடும் வண்ணம் இந்த சம்பவம் அரங் எறியுள்ளது.சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் நகரசபை விலை போய் விட்டதா என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை உறிதிப்படுத்தும் முகமாக குறித்த இடத்தில் இந்த மரத்தை வெட்ட வேண்டாம் என எதிர்பு கூறிய நபர்களிடம் ரூபாவால் செய்ய முடியாததை பவுன்ஸ் செய்யும் என கூறிஉள்ளமை எமது தாய்நாட்டையும் அரச செவையையும் இளிவுபடுத்தும் செயலாக பார்க்க முடிகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை லன்டன் பவுன்ஸ் க்கு அடிமை என்பதை நிறுபிப்பார்களா?