நேற்றைய தினம் வடக்கின் பாரம்பரியத்தை மீண்டும் உலகறியச் செய்ய நீதி அமைச்சர் மற்றும் பொதுவான பெரமுன கட்சியின் போசகர் மற்றும் உலகறிந்த அரசியல் மற்றும் சட்ட மேதை ஜீ எல் பீரீஸ் ஐயா அவர்களையும் பனை அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் கிறிஸ்சாந்த பத்தியா ஜா அவர்கள் பனை அபிவிருத்தி அதிகாரசபையின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் ஏற்றுமதி சார்ந்து யாழ்ப்பாணத்தில் சில விளக்கங்களை வழங்கியிருந்தார்.வடக்கின் அடையாளாம் பனை மரம். பனை சார்ந்து எமது தொழிலாளருக்கும் பனைமரத்தில் எதுவுமே கழிவு இல்லை என்பதை சர்வதேச ரீதியில் உலகறியச் செய்தவரும் பனைசார்ந்த உற்பத்திகளை எமது மக்களுக்கு சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்கியவரும். தெற்க்கில் எமது வளத்தை பிரபல்யமாக்வும் முயற்சி செய்து அதில் வெற்றி கண்டு வருபவர் தான் .
பனை அபிவிருத்தி சபை தலைவர் பத்திராஜா அவர்கள் என பனை சார்ந்த தொழில் புரியும் பலரும் வாழ்த்தி வருகின்றனர்
இவரின் முயற்சியால் சென்ற வருடம் பனை அபிவிருத்தி அதிகாரசபை பாரிய வளர்ச்சி மற்றும் லாபம் ஈட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது
இவருக்கு எதிராக சில தமிழ் தரப்புக்கள் போர் கொடி பிடித்தனர் அது குறித்து புலம் பெயர் பனை சார்ந்த பொருட்களின் மேற்குலக விற்பனை பிரதிநிதி சிலரை தொடர்பு கொண்டு கேட்டபோது
இவர் இனமத பேதம் கடந்து தம்மை நேரடியாக சந்தித்து நீங்கள் எமது வடக்கு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த பணம் வழங்க தேவையில்லை அவர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தி தாருங்கள் அது அவர்களின் வாழ்க்கையில் உத்வேகம் எடுக்கும் என்றும் வடக்கின் அடையாளம் அதை அழியவிட கூடாது என பாடுபடும் ஒரு சகோதர இன தலைவர் என்றார்.இவர் நேரடியாக தங்களை சந்திப்பதால் ஒரு சில இடைதரகர்கள் ஊழல் செய்ய முடியாமல் இனவாதம் தூண்ட ஆரம்பித்துள்ளனர் இவர்கள் தங்கள் தவறுகளை மறைக்க இறுதியில் கையில் எடுக்கும் ஆயுதம் இனவாதமே என்றனர்.
Next Post