இன்றையதினம் அலரிமாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய, பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக,
✍️நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்
✍️தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்
✍️கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம்
ஆகிய திட்டங்கள் சற்றுமுன்னர் அலரிமாளிகையில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டன இத்திட்டத்தால் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி வரையான மக்கள் நன்மை அடைவார்கள் என பிரதமர் அவர்களின் வடமாகாண இணைப்புச் செயலாளர் காசிலிங்கம் கீத்நாத் அவர்கள் தெரிவித்தார்.