ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்ற உடன் தான் ஓர் அரசியல் சானக்கியன் என்பதை நிறுபித்துக் காட்டி இருந்தார் அதாவது தமிழ் அரசியல் தலைமைகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக வந்தால் தான் தீர்வு வழங்க தயார் என்று இந்த அறிவிப்பு வந்த சில நாட்களில் இன்னும் பல தமிழ் கட்சி பிளவுகள் அடுத்தடுத்து தமிழ் அரசியலில் பதிவானது ஆனால் இது ஏற்கனவே தமிழ் அரசியல் தலைமைகளை அவர் கணித்து வைத்திருந்த ஒன்று தான். ஆனால் அவரின் இரண்டாவது நகர்வு இப்படி இருக்கும் என்றோ அல்லது ரணில் விக்கிரமசிங்க இவ்வளவு இரக்கமற்ற ஒருவராக தமிழ் மக்கள் நிலைப்பாட்டில் இருப்பார் என்றோ யாரும் நினைத்து பார்க்க மாட்டார்கள் அது தான் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வருவது இதை தமிழ் மக்களுக்கான தீர்வாக வழங்குவது என்ற வியூகம் இந்த வியூகத்தில் வடமாகணத்தில் சகோதர படுகொலைகள் தினம் அரங்கேறும் “யார் தருவார் அரியாசனம்” என்று அதிகார போட்டிகள் அரங்கேறும் என்பது அவரின் திட்டம் இதை தொடர்ந்து மூன்றாவதுதிட்டம் தான் காணி அதிகாரத்தை வழங்கினால் புலம்பெயர் தேசமும் வடமாகண தமிழர்களையும் பிரிக்க முடியும் என்பது அவரின் திட்டம் அதாவது காணி அதிகாரம் வழங்கினால் புலம்பெயர் தமிழர்களின் காணிகளை சொந்த இனம் ஆக்கிரமிக்கும் பேரவலம் அரங்கேறும் அதாவது இவர்கள் ஆளுக்காள் வெளிநாட்டில் உள்ளவர்கள் காணிகளை தமது பெயருக்கு மாற்றுவார்கள் அதிகாரத்துக்கு சண்டை வரும் இரத்தாறு ஓடும் என அவரின் வயூகங்கள் வெற்றி பெறுமா?