வடமாகாண விமல் அணி தலைவருக்கு எதிராக பொலிஸ் இல் முறைப்பாடு!!!

கௌரவ அமைச்சர் விமல்வீரவன்ச அவர்களின் கீழ் இயங்கிவரும் வடமாகாண விமல் அணியின் தலைவருக்கு எதிராக சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டதாக அறியமுடிகிறது இது குறித்து வன்னிக்கான விமல் வீரவன்ச அவர்களின் இணைப்பு செயலாளர் அவர்களிடம் வினாவிய போது வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில்க்குளம் கிராம அலுவலர் பிரிவில் பாலர் பாடசாலை ஒன்று தேவை என்ற கோரிக்கை கடிதத்துக்கு அமைச்சர் ஊடாக காணி அமைச்சர் காணி ஆணையாளர் அரசாங்க அதிபர் ஆகியோரின் ஊடாக பிரதேச செயலாளர் அவர்களுக்கு கிராம அபிவிருத்தி சங்கம் ஊடாக பாலர் பாடசாலை அமைக்க இடம் ஒன்றை கோரியிருந்தோம் இந்த கடிதத்தை பரிசீலனை செய்து பிரதேச செயலாளர் கிராம ஆரம்ப கல்வியின் தேவை கருதி ஓர் இடத்தை வழங்கி இருந்தார் அது பிடிக்காத சிலர் இது போன்ற சிறுபிள்ளை தனமாக முறைப்பாடு செய்திருந்தனர்.ஆனால் விசாரனைகளை முன் எடுத்த பொலிஸார் இது போலியான முறைப்பாடு என கூறி பிரதேச செயலாளர் இடம் சென்று கதைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறினார்.