வடமாகாண வைத்தியசாலை சிலவற்றில் அதிகார துஸ்பிரயோகமா?சாரதிகள் உங்கள் அடிமைகளா!!!!!!

வடமாகாணத்தில் உள்ள சில வைத்தியசாலை நோயாளர்காவு வண்டி சாரதிகளுக்கு அவசர உள்ளக இடமாற்றம் ஒன்றை வழங்க பிராந்திய சுகாதார சேவை பணிமனையால் விண்ணப்பப் படிவம் மற்றும் கடிதம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த இடமாற்றம் குறித்து சாரதிகள் கருத்து தெரிவிக்கையில் வடமாகாணத்தில் ஐந்து வைத்தியசாலைகள் மாகாண சபை ஆளுகையில் இருந்து விடுவிக்கப்பட்டு மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும்

இதற்கான வர்த்தமாணி அறிவித்தல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த சந்தர்ப்பத்தில் covid இடர்காலம் மற்றும் சுனாமி இவ்வாறன அனர்த்த காலங்களில் தாமே மக்களுக்கு தமது முழுமையான சேவையை வழங்கியதாகவும்

தேசிய வைத்தியசாலை யாக தரமுயற்றும் போது அந்த வைத்திய சாலையில் பணிபுரிபவர்கள் மத்திய அரசிற்கு கீழ் நேரடியாக பணி புரிய முடியும். இதற்கான சூழ்ச்சியாகவே சுயலாபம் பெறும் நோக்கில் இந்த இடமாற்றம் திட்டமிட்டு இடம் பெறுவதாகவும் இவர்களின் உறவினர்கள் மற்றும் சில அரசியல் வாதிகளின் உறவினர்களை உள்நுளைப்பதற்காக இந்த இடமாற்றம் செய்யப்படுவதாக சாரதிகள் குற்றம் சாட்டியுள்ளர்.

வவுனியா வைத்தியசாலையில் சாதாரண ஊழியர் ஒருவர் இறந்தவர்கள் உடலம் ஏற்றும் வாகனத்திற்கு சாரதியாக இருப்பது அரசாங்க சட்ட திட்டத்திற்கு உட்பட்டதா?அனைத்தும் திட்டமிட்டு சுய லாபத்திற்காக செய்யப்படும் அரச அதிகார துஸ்பிரயோகம் அரசாங்கத்தால் செய்யப்படும் சிறந்த திட்டங்களையும் அதன் ஊடாக அரச பணியாளர்களுக்கு கிடைக்கும் பிரதிபலனை கூட இவ்வாறன அரச அதிகாரிகள் துஸ்பிரயோகம் செய்வது கவலையளிப்பதாக கூறினர்.

அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர் மற்றும் குறிப்பிட்ட வைத்தியசாலை நிர்வாகிகள் மாகாண பிரதம செயலாளர்களே இது உங்கள் கவனத்திற்கு!!!!