வன்னியில் அமைச்சர் டக்ளஸ் பெயரை வைத்து ஊழல்!!!

வடமாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வழங்கி அவர்களின் குடும்ப சுமையை குறைந்த ஒரு தலைவர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அமைப்பு என்ற போர்வையில் இலங்கை நீதி மன்றத்தில் சான்றுப் பொருட்கள் திருடி விற்ற வழக்கின் சில சூத்திரதாரிகள் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அவர்களின் ஊடாக தாம் உத்தமர் போல் மக்களுக்கு நிவாரண பொதிகள் ஒருபுறம் வழங்கிக் கொண்டு மறு புறம் கட்டப்பஞ்சாயத்து மற்றும் கப்பம் பெறும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக நீதி மன்ற வழக்கில் சான்றுப் பொருட்களை இழந்த மக்கள் கவலை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன் வவுனியா நீதிமன்றின் பல லட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் கஞ்சா உள்ளடங்கிய சான்றுப்பொருட்களை களவாடிய குற்றத்தால் வவுனியா நீதி மன்றில் பணியாற்றிய தற்போது தேடப்பட்டு வருபவரும் இந்தியாவில் தலைமறைவாகியுள்ள முருகா என்ற பிரதான சூத்திர தாரியுடன் இணைந்து பல வழக்குகள் தொடுக்கப்பட்டு தற்போது வெளி மறியலில் உள்ள ரமணன் என்பவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள வவுனியா அபிவிருத்தி குழு தலைவரை கேடயமாக பாவித்து கட்டப்பஞ்சாயத்து கப்பம் போன்ற சட்டவிரோத வேலைகளை செய்து வருவதாகவும் இனிவரும் காலத்தில் தமது சான்றுப் பொருட்கள் அடங்கிய வழக்கு அதிகாரத்தை பாவித்து தள்ளுபடி செய்யப்படுமா? என கவலை தெரிவித்தனர்

வடமாகாணத்தில் பல சேவைகளை தமிழரில் கருசரணையுடன் செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா?தலைமை நீதிபதி இளஞ்செழியன் ஐயா! இருக்கும் எமது நகரில் எமது மக்களுக்கு அநீதி இளைக்கப்படுமா? என கவலை தெரிவித்தனர்.தமக்கு சேவை செய்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பலரிடம் முறையிட்டும் அவர்கள் பதில் தாம் இதை பார்க்க முடியாது பெரிய தோழர் அமைச்சர் அவர்களிடம் முறையிடும் கள் என்று அமைச்சர் அவர்களே! உங்கள் சேவைக்கும் உங்கள் பொறுப்புக்கும் தலைவணங்கும் மக்களின் ஆதங்கம் இது? இது உங்களின் கவனத்திற்கு!!