வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சேனைப்புலவு என்னும் இடத்தில் இன்று யுவதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர் பாலசுந்தரம் சந்திரகலா வயது 33 என அறிய முடிகிறது.. கொலைக்கான காரணம் எதுவும் தற்போதைய நிலையில் அறிய முடியவில்லை. மேலதிக விசாரனையை நெடுங்கேணி பொலிஸர் ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகிறது.