வன்னியில் மக்களை ஏமாற்றியவர்களுக்கு கருணா அம்மான் அதிரடி! (வீடியோ)

இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதியில் முக்கிய தமிழ் ஆளுகை கொண்ட தலைமையின் கட்சியாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சி உருவெடுத்து வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்தக் காட்சியில் தலைவர் போராட்ட காலங்களில் கருணா அம்மான் என அழைக்கப்பட்ட முக்கிய தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் என்பதும் இவர் முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர்களின் உரிமை கருணை கொண்ட கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர்தமிழ் மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை முன்வைத்துள்ளார் வன்னியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சரவணமுத்து ஜெயக்குமார் அவர்கள் உத்தியோக பூர்வமாக நிர்வாகிக்கப்பட்டுள்ளார் என்றும் இதுவரைகாலமும் வடமாகாணத்தில் அதுவும் வன்னியில் தனிப்பட்ட முறையில் கருணா அம்மானின் பெயரையோ அல்லது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பெயரையோ கலக்கப்படும் தரும் முகமாக தவறாக பயன்படுத்தி வந்ததாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் இந்த நபர்களுக்கு தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றும் இவர்களுக்கு தம்மால் உத்தியோகபூர்வமான எந்த தாம் சார்ந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முக்கிய உறுப்பினர் தெரிவித்துள்ளார் இதுகுறித்த தம்மால் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளியே உத்தியோகபூர்வமானது என்றும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் வடமாகாணம் குறிப்பாக வவுனியாவில் இன முறுகலை ஏற்படுத்த ஒரு சில கும்பல் தம்மை கருணா அம்மானின் இணைப்புச் செயலாளராக காட்டி கப்பம் பெறுதல் ஆட்கடத்தல் கொலை கொள்ளை போன்ற சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தமது பெயரை யாரும் பாவித்தால் உடனடியாக தமக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் இவ்வாறான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பெயரை பாவித்து யாரும் கப்பம் கோரினால் அல்லது நிதி மோசடியில் ஈடுபட்டாலும் இதைவிட சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் யாராக இருப்பினும் உடனடியாக தமக்கு அறியத்தருமாறு தாம் சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர்சரவணமுத்து ஜெயக்குமார் அவர்கள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். இது இவ்வாறு இருக்க ஆளுமை பொருந்திய தமிழர்களின் தலைமை என கருணா அம்மானை அடையாளம் காட்ட முடியும் என பல சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்தனர். வடக்கின் ஒருசில அரசியல் ஆர்வலர்களின் கருத்தின்படி வருங்காலத்தில் வட மாகாணத்தின் அபிவிருத்தி வேலைவாய்ப்பு கல்வி போன்ற விடயங்களில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கூடிய கவனம் செலுத்தும் என நம்பப்படுகிறது