வவுனியாவில் அமர்ந்து மதுபானம் அருந்தும் மதுபான சாலைக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள்..? வவுனியாவில் நடப்பது என்ன..? கிளம்பிய சர்ச்சை!!!

இலங்கையில் வடமாகாணத்தில் அதுவும் வவுனியாவில் நடப்பது என்ன? வேறு அரசாங்கமா?அல்லது வேறு நீதியா…? தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் மதுபானம் விற்பனை செய்வதற்கு மட்டுமே உரிமம் உள்ள மதுபான சாலைகளுக்கு நாடுபூராகவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு எதிர் திசையில் உள்ள அமர்ந்து குடிக்கும் உரிமம் கொண்ட மதுபானசாலை கடந்த சில நாட்களாக இயங்கி வருகிறது.இச் செயற்பாட்டிற்கு அனுமதி வழங்கியது யார்..?

இச்செயற்பாடு சுகாதார பிரிவினர் மற்றும் அதிகாரம் கொண்ட அரச அதிகாரிகள் கண்களுக்கு புலப்படவில்லையா..? இல்லை வவுனியாவில் வேறு அரச கட்டமைப்பு கொண்ட நிர்வாகம் இயங்குகின்றதா..? என சமூக நல விரும்பிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் சரமாரியான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலப்பகுதியில் அத்தியாவசிய உணவகங்களே! மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு அரசாங்க சட்டத்தினை மீறி செயற்படுவது சரியானதா..?

வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் ஊழலின் பக்கம் சாய்ந்தார்களா..? சம்மந்தப்பட்ட அதிகாரிகளே! இது உங்களின் கவனத்திற்கு….!!! “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”!