வவுனியாவில் தடம்பதித்தது LCDC!!!

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் இயங்கிவரும் LCDC தனியார் பல்கலைக்கழகம் சமூக சேவை என்பதை தாண்டி மாணவர் சேவை என்ற சிகரத்தை தொட்டதாக உணரமுடிகிறது.

அடிப்படை ஆங்கில அறிவை மேம்படுத்த வேண்டும் என வவுனியா கோவில்குளம் கிராம பொது அமைப்புக்கள் வடமாகாண விமல் அணியிடம் விடுத்த வேண்டுதலுக்கு அமைவாக குறித்த பல்கலைக்கழகத்திடம் குறித்த பிரச்சனை நட்பு ரீதியாக முன்வைக்கப்பட்ட போது தாமாகவே முன்வந்து கோவில்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

அதன் அடுத்த கட்டமாக வவுனியா இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் பெற்றார் மற்றும் மாணவர்களின் விருப்பின் பெயரில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

இது குறித்து இந்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர் சிலரிடம் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தாம் தனியார் பல்கலைக்கழகம் என்பது பணத்தை வழங்கி தான் படிக்க வேண்டும் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் இது சாத்தியம் அற்ற ஒன்று ஓர் தனியார் பல்கலைக்கழகம் தாமாகவே முன்வந்து இந்த இலவச கற்கை நெறியை ஆரம்பித்திருப்பது வந்தாரை வாழவைக்கும் வவுனியாவில் ஆங்கில அறிவு மாணவர்கள் மத்தியில் மேலோங்கும் என்பதில் ஐயமில்லை என்றனர்.

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்ட போது கோவில்குளம் பொது அமைப்புக்களுக்கும் பாடசாலை நிர்வாகத்துக்கும் இந்த சந்தர்ப்பத்தை தமக்கு வழங்கியதற்கு நன்றிகள் மாணவர்களுக்கு சிறந்த ஓர் கற்பித்தல் சேவையை வழங்குவோம் என்றனர்.