வவுனியா பிரதேச செயலகம் மற்றும் நகரசபை ஆகிய நிர்வாக கட்டமைப்பின் அர்ப்பணிப்பான சேவையை பலரும் பாராட்டி வரும் இந்த நேரத்தில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்களை இயல்பு வாழ்வுக்கு திருப்பி மீண்டும் அவர்கள் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி COVID-19 பரவலை கட்டுப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள உயர்அதிகாரியாக
வவுனியா பிரதேச செயலாளர் அவர்கள் நேற்றுமுன்தினம் (30.09.2021) கிராம அலுவலர்கள் அனைவருக்கும் அலுவலகத்திற்கு சேவை பெற வருபவர்களின் தடுப்பூசி அட்டைகளை பரிசோதித்து இரு தடுப்பூசிகளும் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரம் அலுவலகத்தினுள் எடுத்து சேவை வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.
இந்த செய்தி குறித்து சமூக ஊடகங்கள் மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்தாலும் பிரதேச செயலாளர் அவர்களின் அறிவித்தல் தடுப்பூசி ஏற்றாதவர்களை கிராம ரீதியில் இனங்கண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி தடுப்பூசியினை 100 வீதம் அனைவருக்கும் ஏற்ற வழிவகுக்கும் என சில சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரை போல் வவுனியா நகரசபை தலைவர் அவர்களும் தனது தார்மீக பொறுப்பில் இருந்து தவறாமல் இடர்காலத்தில், தலைமை என்பதற்கு இலக்கணமாக நிகழ்வதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர் COVID தொற்றினால் இறந்த உடல்களை தகனம் செய்தல் மற்றும் மக்களுக்கு சுகாதார அறிவுறுத்தல்களை வழங்கல் என மக்கள் சேவையில் இந்த இடர்காலத்தில் ஆர்வமாக செயற்பட்ட நகரசபை தலைவர் அவர்கள் நேற்றைய தினம் பாதையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நகர்பகுதியில் அதிகம் கூட வேண்டாம் எனவும் சுகாதார வளிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வவுனியா மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி, மருத்துவ ஆலோசனைக்கு அமைவாக விரைவாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.இவ்வாறு வீதியில் மக்களுக்கு முன்னுதாரணமாக விழிப்புணர்வு செய்வதை பலரும் பாராட்டினர்.
வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் நகரசபை தலைவர் மற்றும் ஊழியர்கள் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் சினோபாம் தடுப்பூசி தான் பெற்றுக்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இது குறித்து சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில் நகரசபை ஊழியர்கள் மற்றும் கிராம சேவையாளர்கள் சுகாதார ஊழியர்கள் இராணுவத்தினர் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பான சேவையை வாழ்த்த பாராட்ட வார்த்தை இல்லை என தெரிவித்தனர்.
இது இவ்வாறு இருக்க!! எமது ஊடகத்தின் பார்வையில் தடுப்பூசி ஏற்றுவதற்கான நிலைய ஒழுங்கு படுத்தல் சிற்றுண்டி மற்றும் உதவிக்குழுக்களின் உதவி நாடுதல் பெயர் பட்டியல் தயாரித்தல் மக்களுக்கு அறிவித்தல் என தடுப்பூசி ஏற்றுவதற்கான சகல பொறுப்புக்களும் கிராம அலுவலர்கள் மத்தியில் தினிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு சிற்றுண்டி மற்றும் மதியபோசனத்திற்கு கூட எதுவிதமான நிதி ஒதுக்கீடும் வழங்கப்படாமல் இந்த இடர்காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் கிராம மட்ட பொது அமைப்புகள் மற்றும் வர்த்தகர்களிடம் உதவி கொரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இனிவரும் காலங்களில் உயர் அதிகாரிகள் இதை கவனத்தில் எடுத்து நேரம் காலம் பார்க்காமல் தமது கடமையை செய்யும் அரச ஊழியர்களுக்கு இதற்கான ஒதுக்கீடுகள் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என இந்த ஒழுங்கு படுத்தலில் பங்கு கொண்ட கிராம இளைஞர்கள் தெரிவித்தனர்.