வவுனியாவில் நடந்த அதிசயம்!உண்மையை கசிய விடும் பொது மக்கள்!!!

வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட புகையிரத நிலைய வீதியில் முத்தையா மண்டபத்துக்கு எதிராகவும் ஆதி விநாயகர் ஆலயத்துக்கு அருகிலும் இருந்த வவுனியாவில் மிகவும் பழமை வாய்ந்த (எம்பியார்) மதுபான சாலை நேற்று முன்தினம் அதிகாலை தீ பற்றி மேற்பகுதி முற்று முழுதாக எரிந்த செய்தியை அறிந்த எமது செய்தியாளர் இது குறித்து ஒரு சில கிராம மக்கள் மற்றும் அரச அதிகாரிகளிடமும் கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
இந்த தீ சம்பவம் குறித்த கருத்துக்களை நாம் பரிசீலனை செய்து பார்க்கும் போது இந்த மதுபான நிலைய நிர்வாகம் குறிப்பிட்ட சில காலமாக இந்த கட்டிடத்தை உடைத்து ஓர் நவீன முறையில் பிரமாண்டமான மதுபான சாலையை அமைக்க அனுமதி பெற முயற்சித்ததாகவும் அரச வரையறையில் உள்ள ஒழுங்கு விதிகளுக்கு முரணாக இந்த மதுபானசாலைக்கு அருகில் ஆதி விநாயகர் ஆலயம் இருப்பதனால் இந்த மதுபான சாலையை புணர்நிர்மானம் செய்ய முடியாது எனவும் இருக்கும் இந்த கட்டிடத்தில் இதை நடத்த கூடிய காலம் வரை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் இந்த புணரமைப்புக்கு அருகில் உள்ள ஆலய நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த மதுபான சாலை தானாக தீ பற்றி எரித்துள்ளமை மக்கள் மத்தியில் புணரமைப்பு செய்வதற்கான ஓர் மாஜை என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அரச சட்டங்களை பணத்தினாலும் இவ்வாறான குள்ளத்தனமான செயற்பாடுகளாலும் மாற்ற முடியும் என மேற்குலக நாடுகளில் பல அரசு நிதி மோசடியில் ஈடுபட்டு தற்போது நாட்டில் வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சி செய்யும் பலர் தாம் செல்வந்தர்கள் என காட்ட முற்படுவதும் சிலர் தாம் நாட்டிலும் மக்களிலும் கருசணை கொண்டவர்கள் போல் நடித்து சட்டவிரோத வேலைகளையும் தமது காரியங்களை செய்ய முற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நகர சபை தலைவரே! இது உங்கள் கவனத்திற்கு நீங்கள் உங்கள் கடமையை செய்வீர்களா? இல்லை தானாக தீ பற்றிய அதிசயமாக வவுனியாவின் மதுபான தொல்பொருள் காட்சியமாக உருவாக்க உறுதுணையாக இருப்பீர்களா? இது உங்கள் கவனத்திற்கு!!!