வவுனியாவில் பா.உ இளைஞர்கள் மீது தாக்குதல்!!! ஜனாதிபதி எடுக்கப்போகும் முடிவு என்ன???

வவுனியா குருமன்காடு யங்கிஸ்ரார் விளையாட்டு கழகத்திற்கு அருகில் சில இளைஞர்கள் இடையே மோட்டார் சைக்கிள் ஓடுவதில் முறுகல் நிலை ஏற்பட்டதாக அறியமுடிகிறது.

இதில் ஒருவர் வவுனியா அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஆன கு.திலீபன் அவர்களது மகன் என சம்பவ இடத்தில் நின்று எமது இணையத்தளத்தின் செய்தி முகவர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த முறுகல் நிலையை தொடர்ந்து தனது மகனுக்காக சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தனது சக தோழர்களுடன் வருகை தந்து குறித்த இளைஞரை தாக்கியதாகவும் அதன் பின் தனது அலுவலகம் அழைத்துச் சென்று தமது பாணியில் விசாரித்து அவருக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி போலி வழக்கு பதிவு செய்து பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞரின் சக தோழர்கள் குறிப்பிட்டனர்.

ஆளுங்கட்சி சார்பான பிரதிநிதிகள் மற்றும் அமைச்சுக்களின் இணைப்பு செயலாளர்கள் மௌனம் சாதிப்பது ஏன்? இல்லை இது தான் புதிய சட்டமா? இதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? இல்லை சோடிக்கப்பட்ட வழக்கை இலவசமாக நீதிமன்றில் வாதாடுமா? என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

இந்த அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகளை குடும்ப அங்கத்தவர்கள் செய்ததற்காக ஒரு சில அமைச்சர்கள் அமைச்சு பதவி கூட கேள்வி குறி ஆன வரலாறுகள் பதிவாகியுள்ள நிலையில்! இது வடக்கு மாகாணத்துக்கு விதி விலக்கா??

ஜனாதிபதி மற்றும் குறித்த கட்சியின் தலைவர் எடுக்கப் போகும் முடிவு என்ன காத்திருக்கும் வவுனியா வாழ் மக்கள்!!!