வவுனியா நகரசபையில் நடந்தது என்ன?முதல்வன் படத்திற்கு உயிரூட்டிய நகரசபை தலைவர்!

வடமாகாணத்தின் தனித்துவ அடையாளம் கிடைத்த வவுனியா நகரசபை என்பதில் மாற்று இல்லை!வவுனியா நகர சபையின் 40 அமர்வுகளில் தனித்துவ அடையாளம் கௌரவ குளோப் ரி.கே. இராசலிங்கம் ஐயா அவர்கள்.இன்று தமிழரசுக்கட்சியில் உள்ள இளம் அரசியல் வாதிகளுக்கு சேவைக்கு இடம் வழங்கும் நோக்கில் தனது பதவியை இன்று இராஜனாமா செய்து தன் பெருந்தன்மையை பறைசாற்றி உள்ளார் இது இவ்வாறிருக்க இந்த நிகழ்வில் நகரசபை தலைவர் கௌதமன் அவர்களும் தனது உயரிய பண்பை பறைசாத்தியுள்ளார்.அதாவது இன்று ராஜினாமா செய்யும் கௌரவ உறுப்பினர் அவர்களை ஒருநாள் நகரசபைத் தலைவராக கௌரவ பதவி வழங்கி நகரசபை தலைவர் கௌரவித்து உள்ளார். இத்தகைய செயலுக்கு சமூக ஆர்வலர்கள் அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் நகரசபை தலைவரை வாழ்த்தி வரும் இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் முதல்வன் படத்திற்கு உயீர் ஊட்டிய தலைவர் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.இன்றைய தினத்தில் உதவி நகர பிதாவும் சமூகம் அழிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த உத்தம செயற்பாட்டுக்கு சபையில் உள்ள சகல உறுப்பினர்களும் ஒத்தாசை வழங்கியதாக அறிய முடிகிறது.