வவுனியா மக்களே விழித்துக்கொள்வீர்!இது நீங்கள் சிந்தித்து செயல்படுவதற்கான நேரம்!

வவுனியா மக்களே விழித்துக்கொள்வீர்.
வவுனியா பூந்தோட்டம் மின் மயானம் நகரசபையால் நேற்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது. (கொரோனா மரணங்களை எரிக்கின்ற மயானம்)
ஆக மயானம் தயார் செய்யப்பட்டுள்ளது..!!!

வவுனியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளுக்கு நாள் இறப்பும் வீதம் அதிகரித்துக்கொண்டு போகிறது.

வவுனியா வைத்தியசாலை நிலைமை கை மீறி போய்விட்டதாக வைத்தியர்கள் தாதிகள் வேதனையில் திணறி வருகின்றார்கள்.

ஆனால் மக்கள் பொறுப்பற்று ஊர் முடக்கத்தில் இருந்தும் அதிகமாக நடமாடி திரிகின்றார்கள். உங்கள் வீட்டில் தொற்று ஏற்படும் வரை எல்லாம், எல்லாம்.. அலட்சியம்..
இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு.. சுய அவதானம் இல்லாவின் யாராலும் காப்பாற்ற முடியாது. நீங்களே உங்களின், உங்கள் குடும்பத்தின் பாதுகாவலர்கள். இவ்வாறு வவுனியாவில் உள்ள சில சமூக ஆர்வலர்கள் கருதும் நிலையில் மக்கள் நம்மையும் தங்கள் கிராமத்தையும் வவுனியா வைரமும் காப்பாற்ற முன்வருவார்களா? இல்லை அரசாங்கத்தை குறைகூறி கொண்டு இருக்கப் போகிறார்களா?

வவுனியா மக்களே விழித்துக்கொள்வீர்..