வவுனியா மாவட்ட விவசாயிகளின் வழங்க இழுத்தடிப்பு செய்யப்பட்ட பணத்தை பெற்றுக்கொடுத்த வடமாகாண விமல் அணி!!!
வவுனியா மாவட்டத்தின் விவசாயிகளின் 2021ம் ஆண்டு இயற்க்கை அனர்த்தத்தால் அழிந்து போன பயிர் செய்கைகளின் இழப்பீட்டு காப்புறுதியை காப்புறுதி நிறுவனம் பகுதி பகுதியாக வழங்கிய போதும் வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மோளனத்தின் தலைவர் காட்டிய தாமதம் மற்றும் அசமந்த போக்கு காரணமாக இழப்பீடு கிடைக்க காலதாமதம் ஆகியதால் விவசாயிகள் மனைஉழைச்சலுக்குள்ளாகி இருந்த நிலையில் வட மாகாண விமல் அணியின் விவசாய ஆலோசகர் இடம் முறையிட்டுளளனர.
இதை தொடர்ந்து விமல் அணியின் தலைவர் சி.ஜோதிக்குமரன் தலைமையில் கௌரவ அமைச்சர் விமல்வீரவன்ச அவர்களின் வடமாகாண இணைப்பு செயலாளர் மற்றும் வன்னி இணைப்பு செயலாளர் மற்றும் வடமாகாண விமல் அணியின் இயற்கைவிவசாய ஆலோசகர்
ஆகியோரின் சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய
WW அணியின் கீழ் வடக்கிற்க்கான கமக்காரர்கள் ஆலோசனைக்ககா நியமிக்கபட்ட இளம் விவசாயி Chanthira Dilson என்பவரால் பொலிஸ் நிலையத்தில் மாவட்ட கமக்கார அமைப்பு தலைவருக்கு எதிராக முறைப்பாடு செய்யபட்டது.
அதை தொடர்ந்து 42 விவசாயிகளுக்கான இழப்பீட்டு காசோலையை 7/1/2022 ல் இருந்து வவுனியா மாவட்ட கமக்கார சம்மோளத்திடம் இருந்து பெற்று குறித்த விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். என் அறிய முடிகிறது.
தொடர்ந்து அணைவரதும் இழப்பீட்டு காசோலைகள் கொடுக்கபடுகிறதா என்பதை கண்காணித்து வருவோம் என் வடமாகாண விமல் அணி தெரிவித்துள்ளது.
இனி வருங்காலத்தில் விவசாயிகளுக்கு இவ்வாறு அநீதிகள் நடைபெறும் பொழுது நேரடியாக உயர் அதிகாரிகள்மூலமோ இல்லை சட்ட நடவடிக்கை மூலம் உங்களுக்கான நீதியை பெற்று கொள்ள முடியும் என்பதை WW northern team உறுதிபபடுத்தி உள்ளது.
அறிந்து இருக்காத விவசாயிகளுக்கு அறியபடுத்துவது ஒவ்வொருதர் கடமை எனவும்
விவாசாயிகள் எங்களுக்கும் நாட்டுக்கும் முதுகெலும்பு முக்கியமாக இருப்பவர்கள் இவர்களை இப்படியாக அநீதிக்கு தள்ள முற்படுகிறவர்கள். தண்டிக்கபட வேண்டியவர்கள் பதவிகளில் இருக்க தகுதியற்றவர்களே. என் வடமாகாண விமல் அணி தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஊழல் வாதிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் என விவசாயிகள் பலரும் தெரிவித்தனர்.