வவுனியா கருங்காலிக்குளம் .அ.த.க.பாடசாலையில் தரம் 5 புலமை பரிசில் எழுதும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வடமாகாண விமல் அணியினால் அமரர்.மகாதோவா நிர்மலா அவர்களின் பிறந்த தின நினைவாக
சுமாட் வகுப்பறைக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதோடு மாணவர்களுக்கான பயிற்சி தாள்கள் மற்றும் மாணவர்களை மரம் நடுதல் மற்றும் வளர்த்தல் போன்றவற்றை ஊக்குவிக்கும் வகையில் நினைவு மரங்களும் நடப்பட்டது.
விமலின் கல்விக்கான செயற்திட்டம் மற்றும் விமலின் சுவாசம் எனும் மர படுகை திட்டம் என்பன வடமாகாண பிரதம செயலாளர் அவர்களின் கனவை நனவாக்க என ஒருநாளில் ஒரு மனிதன் சுவாசிக்க 550லீற்றர் ஒட்சிசன் தேவை எனும் வாசகத்துடன் பிரதம செயலாளர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வடமாகாண விமல் அணியின் செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச அவர்களின் வன்னி க்கான ஒருங்கிணைப்பு செயலாளர் ம.புஸ்பதோவா அவர்களிடம் கேட்டபோது எனது அம்மாவின் நினைவாக வடமாகாண விமல் அணியின் ஊடாக இந்த செயற்திட்டத்தை முன் எடுத்தேன் தொடர்ச்சியாக இவர்களின் கல்விக்கு கரம் கொடுப்போம்
இருப்பினும் ஓமந்தை பிரதேசத்தை பார்க்கும் போது மிக சந்தோஷமாக உள்ளது என்றார்! ஏன் என கேட்டபோது? சேமமடு பாடசாலை பழைய மாணவர்கள் பல பாடசாலைகளில் சுமாட் வகுப்பறை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர் அவர்கள் சேவை மேன் மேலும் வளர எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இன் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வடமாகாண ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் வன்னி க்கான ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் விமல் அணியின் தலைவர் விமல் அணியின் சுகாதார மற்றும் வாகன ப்பகுதி இணைப்பாளர் மற்றும் விமல் அணியின் கல்வி பகுதி இணைப்பாளர் மற்றும் வர்தகர்பகுதி இணைப்பாளர் அமரர் நிர்மலா அவர்களின் கணவர் மகா தேவா அவர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.