விமலின் வழியில் – மற்றுமொருவரும் பதவி துறப்பு!!

தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிமல் பியதிஸ்ஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.

கொத்மலை பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவர் பதவியையே அவர் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து அவரின் கட்சி சகாவான ஜயந்த சமரவீர இராஜாங்க அமைச்சு பதவியை துறந்தார்.

இந்நிலையிலேயே மற்றுமொரு இன்று அரசால் வழங்கப்பட்ட பதவியை துறந்துள்ளார்.இவரை தொடர இருக்கும் அரசியல் பிரபலம் யார்??