இன்றைய தினம் அரச பங்காளி கட்சிகள் நாட்டை குறைந்ததுமூன்று வாரம் முடிக்குமாறு ஜனாதிபதிக்கு பத்து பங்காளி கட்சி தலைவர்கள் கையொப்பம் இட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் நாட்டில் covid 19 தீவிரமாக பரவிவருவதாலும் நாட்டை முடக்காவிடின் கட்டுப்படுத்த முடியாது போய் விடும் என்றும் நாடு எதிர்கொள்ளவுள்ள பொருளாதார நெருக்கடியினை சந்திக்க நேர்ந்தாலும் அதை ஈடுசெய்ய தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட தயார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் விமல் வீரவன்ச அடங்கிய இந்த தலைவர்களின் ஆலோசனை பரிசீலனை செய்யப்படும் என்றும் நாளை அல்லது நாளை மறுதினம் நாட்டை தற்காலிகமாக முடக்கப்படும் என்றும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச தனது மாவட்ட இணைப்பு செயலாளர்களுக்கு அவசர செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளதாக அறியமுடிகிறது.இந்த செய்தியில் மக்களுக்கு உடனடியாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை செய்யுமாறும் மக்களின் செயற்பாடுகளில் அதிக கவணம் செலுத்துமாறும் இந்த தாக்கத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற முன் நின்று செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.