ஹுவாவி நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சங்கடமான நிலமை!!!!

சீனாவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவி மொபைல் சாதன உற்பத்தி மற்றும் மொபைல் வலையமைப்பு சாதனங்களை வடிவமைத்து வருகின்றது.

அத்துடன் பல நாடுகளில் மொபைல் வலையமைப்பு சாதனங்களை நிறுவியும் கொடுத்து வருகின்றது.

புதிய தொழில்நுட்பப் போர் - InforLake | Tamil

இந்நிறுவனத்தின் வியாபாரங்களுக்கு கடந்த வருடத்தில் அமெரிக்கா தடை விதித்திருந்தது.

இந்நிலையில் ஏனைய சில நாடுகளிலும் ஹுவாவி நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து 5G தொழில்நுட்ப சாதனங்களை நிறுவுவதற்கு ஹுவாவி நிறுவனத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி ஹுவாவி டெலிகொம் நிறுவனத்தின் முழு சாதனங்களையும் 2027 ஆண்டளவில் முழுமையாக நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நடவடிக்கையானது ஹுவாவி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாத முறையில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.