இலங்கை இரானுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 10 ம் திகதி கொண்டாடப்படவுள்ள “இராணுவ தினம்”இன் ஓர் அங்கமாக இராணுவத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஆசிவோண்டி சர்வமத வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் கொவிட்19 சுகாதார வழிகட்டலுக்கு அமைய நடைபெற்றது.இந் நிகழ்வில் இராணுவத் தளபதி மற்றும் அனைத்து சேவை உறுப்பினர்கள்,மரியாதையுடன் சர்வமதத்தலங்களுக்குள் அழைத்து வரப்பட்டு இராணுவக் கொடி மற்றும் அனைத்து படைப்பிரிவுகளின் கொடிகள் சர்வமத சம்பிரதாயங்களுக்கு அமைவாக ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
அதே சமயத்தில்,காயமடைந்த மற்றும் புனர்வாழ்வு மற்றும் மீட்பு நிலையில் உள்ள சேவைசெய்தவர்கள் அவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் போர்க்களங்களிலும் ஏனைய இடங்களிலும் இறந்த அனைத்து போர்வீரர்களின் ஆத்மாக்களின் சாந்திக்காக விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றது, இலங்கை இராணுவத்தினரின் இடர்கால மற்றும் சமூகசேவைகளை அனைவரும் வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.