2000 ரூபாய் பெற நீங்கள் தகுதியானவர்களா? மீண்டும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கைகளில்!!!

மீண்டும் கிராம மட்ட அலுவலகங்கள் கையில் தங்கியுள்ள மக்களின் அன்றாட வாழ்வு கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் நாட்டை தற்காலிகமாக மூடிய இந்த நிலையில் வாழ்வாதாரம் இழந்து அன்றாட உணவுக்கு தவிக்கின்ற நாட்டின் பிரஜைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த கொடுப்பனவு யார் யாருக்கு வழங்க முடியாது என ஒரு மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது.
*சமுர்த்தி பயனாளிகள்..
*அரச உத்தியோகத்தர்கள்
*அரச ஓய்வூதியம் பெறுபவர்கள்
*முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள்
*நூற்றாண்டு பூர்த்தி கொடுப்பனவு உடையோர்
*அங்கவீன கொடுப்பனவு
*சிறுநீரக கொடுப்பனவு
அரசாங்கத்தால் மாதாந்த எந்த ஒரு கொடுப்பனவும் பெறாமல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட நாடு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள என்ற சுற்றறிக்கையில் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் தவிர்ந்து
*ஆடை தொழிற்சாலை
*பாதுகாப்பு ஊழியர்கள்
*மற்றும் கிராம மட்டங்களில் தொழில் ரீதியாக பாதிக்கப்படாமல் தற்பொழுது தமது தொழில்களை முன் தொடர்ந்து கொண்டு இருப்பவர்கள்.
தவிர்ந்து முற்றுமுழுதாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு இந்த நிவாரண உதவித் திட்டத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது இருப்பினும் இந்த பயனாளர்களை சரியான முறையில் இனங்கண்டு வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு கிராம மட்ட அலுவலர்கள் மற்றும் கிராமய குழுவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது நாடு கொவிட் 19 பரவலால் இரண்டு ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் உணவின்றி நாட்டின் எந்தவொரு பிரஜையும் இருந்து விட கூடாது என்று உடனடி நிவாரணத் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. மீண்டும் நாடு இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை எதிர் கொள்ள வேண்டுமாயின் மக்கள் தங்களைத்தாம் தயார்படுத்த வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கிராம மட்ட அதிகாரிகள் தமது கடமைகளை அரசாங்கத்தின் இன்றைய நிலைமையை உணர்ந்து செயல்படுவார்களா?