52 லும் மாணவர்கள் உயிர். மூச்சாக மாறும் விமல்!!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் கைத்தொழில் அமைச்சரும் தற்போதைய பராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அவர்களின் 52 ஆவது பிறந்த தினம் வடமாகாண விமல் அணியால் சர்வமத ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகளுடன் வவுனியாவில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் விமல் வீரவன்ச அவர்களின் கல்விக்கான செயற்திட்டத்தின் கீழ் கோவில்குளம் கிராம அலுவலர் பிரிவில் Lincoln career development college (Pvt).ltd the institute of English இன் அனுசரனையுயன் இலவச அடிப்படை ஆங்கில கற்கை நெறி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வை மேலும் சிறப்பூட்டும் முகமாக 52 மாணவர்களுக்கு இலுப்பை மரக்கன்றுகள் வீடுகளில் வளர்ப்பதற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் வடமாகாண விமலணியினர் தாங்கள் எந்த சூழ் நிலையிலும் மக்களுக்காக சேவை செய்யவே அல்லது மக்கள் பிரச்சனைகளை தட்டி கேட்கவே பின் நிற்க மாட்டோம் என உறுதி எடுத்தனர்.

இந்த நிகழ்வில் வட மாகாண விமல் அணி மற்றும் ஆதரவாளர்கள் மாணவர்கள் பெற்றோர் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். கீழே முழு விடியோ இணைக்கப்பட்டுள்ளது இந்த விடியோ வடமாகாண விமல் அணியின் உத்தியோக முகநூல் பக்கத்தில் அவர்களின் அனுமதியுடன் பிரதி செய்யப்பட்டுள்ளது