வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட கிராமங்களில் நிகழும் கொவிட் மரணங்களின் போது வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்கள் கிராம சேவையாளரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் நகர சபை தலைவரை தொடர்பு கொண்டால் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் தகனத்திற்கான பணம் செலுத்த தேவையில்லை என நகரசபை தலைவர் அறிவித்துள்ளார்.இதற்காக மக்கள் அல்லல் பட தேவையில்லை நகர சபையின் இந்த சமூக நலத்திட்டத்திற்கு மக்கள் முகவர்களை நாட வேண்டிய தேவையும் இல்லை என்றும் கிராம சேவையாளர்களின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் நகர சபைக்கு வருமாறு நகரசபை தலைவர் கௌதமன் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.