Covid 19தடுப்பூசியில் வவுனியாவில் ஊழலா? சந்தேகத்தில் மக்கள்!

வவுனியாவில் இன்று ஆடைத் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு covid தடுப்பூசி ஏற்றப்பட்டுவருகிறது ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் தமது ஊழியர்களில் கொண்ட அதீத அக்கறை காரணமாக வவுனியாவில் வைத்தியதுறையினர் மற்றும் நகரசபை பிரதேச சபை ஊழியர்கள் அரச உத்தியோகத்தர் மற்றும் மக்களுக்காக மக்களுடன் பயணிக்கும் தன்னார்வத் தொண்டர்கள் என பலரும் இருக்க எந்த மாகாணத்திலும் மாவட்டத்திலும் நடக்காத வாறு வவுனியாவில் முதற்கட்ட தடுப்பு மருந்து ஆடைத் தொழிற்சாலைகளில் ஏற்றப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஊசி வவுனியா மாவட்ட மக்களுக்காக வரவழைக்கப்பட்டதா? இல்லை ஆடைத் தொழிற்சாலை களுக்காக பிரத்தியோகமாக வரவழைக்கப்பட்டதா? இல்லை பணத்துக்காக அரச அதிகாரிகள் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி உள்ளனரா? என மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது

எது எவ்வாறு இருந்தாலும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படுகின்றமை சிறந்த விடயமாக இருப்பினும்இவர்களைவிட இந்த காலத்தில் தனது உயிரையும் துச்சமென மதித்து சேவை செய்யும் பல திணைக்களஊழியர்களும் வைத்தியர்கள் தாதியர்கள் என பலர் இருக்கும் இவ்வேளை முதற்கட்டமாக ஆடைத் தொழிற்சாலைக்கு ஏற்றப்படுகின்றன பழ ஊழல்கள் இருக்குமா என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.